அசுர வேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்... சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த கல்லூரி ஊழியர்!

 
கொலை

அசுர வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று வல்லநாடு அருகே சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த வேளாண்மை கல்லூரி ஊழியர் மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் பறந்து சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி ஊழியர் அண்ணாதுறை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆத்திமுத்து மகன் அண்ணாதுரை (56). இவர் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

விபத்து

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  அண்ணாதுரை மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web