தறிகெட்டு ஓடிய கார்.. உள்ளே பார்த்தால் உகாண்டா தூதரக ஆவணங்கள்.. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்!

 
பூந்தமல்லி விபத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்லும் ஏராளமான வாகனங்கள் பூந்தமல்லி சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். மேலும், பூந்தமல்லி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இந்நிலையில் இன்று மாலை கீழ்ப்பாக்கம் அருகே தாறுமாறாக ஓடிய கார் ஒன்று சாலையில் சென்ற பைக், கார், ஆட்டோ என 5க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளியது. இதில் 2 குழந்தைகள், ஒரு பெண், ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் துரத்திச் சென்று, வாகனங்கள் மீது மோதிய காரை மடக்கிப் பிடித்தனர்.

கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காரில் இருந்த டிரைவர் உட்பட 2 பேரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் அந்த பகுதியில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிரைவர் குடிபோதையில் இருந்தாரா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய இன்னோவாவை சோதனையிட்டபோது, ​​அதில் ஏராளமான உகாண்டா தூதரக ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. உகாண்டா தூதரகத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? காரில் போதைப்பொருள் உள்ளதா? என அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web