நெகிழ்ச்சி வீடியோ... நக்சல் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களை தோளில் சுமந்து சென்ற அமைச்சர்!
சத்தீஷ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்னர். அப்போது, பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்களை தாக்கினர். அத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்து பெரிய அளவில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
#WATCH | Chhattisgarh Minister Tank Ram Verma gives shoulder, carries the mortal remains of two ITBP jawans who lost their lives in an IED attack by Naxals in Narayanpur district yesterday. pic.twitter.com/1sWTm2qGmc
— ANI (@ANI) October 20, 2024
இது குறித்து பஸ்தார் பகுதிக்கான ஐ.ஜி. பலியானவர்கள் பவார் அமர் ஷாம்ராவ் மற்றும் கே. ராஜேஷ் என தெரிய வந்துள்ளது. இவர்கள் தவிர போலீசாரில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் படிப்படியாக தற்போது குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், வீரர்கள் இரண்டு பேரின் உடல்களை அமைச்சர் ங் ராம் வெர்மா தோளில் சுமந்தபடி சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் “ சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. விரைவில் சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மத்திய, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது ” எனக் கூறியுள்ளார். தன்டேவாடா-நாராயண்பூர் எல்லை பகுதியருகே நெந்தூர் மற்றும் துல்துலி கிராமங்களில் வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் 38 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
