உருவானது புயல் சின்னம்... தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

 
புயல்
 

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், டானா புயல் எதிரொலியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் வரும் அக்டோபர் 23ம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் டானா புயல் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று திங்கள்கிழமை காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. 

டானா புயல்

இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை (அக்.23) மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்.23ல் புயலாக மாறும். இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது.இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்.24ம் தேதி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

தமிழக பகுதிகளிலும், கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று அக்டோபர் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புயல்

இன்று அக்டோபர் 22ல் திருப்பூா், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூா், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் நாளை அக்டோபர் 23ல் தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வங்கக் கடலிலும், வடக்கு அந்தமான் கடலும் வடக்கு அந்தமான் கடல் அக்.22, 23 ஆகிய தேதிகளில் 85 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் எதிரொலி காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!