‘ரொம்ப அநியாயம் பண்றாங்க... டாஸ்மாக் கடையை அகற்றுங்க...’ கலெக்டரின் பொதுமக்கள் கோரிக்கை!

 
பெண்கள் தூத்துக்குடி

தூத்துக்குடி  மாவட்டம் சேர்வைக்காரன்மடம் காமராஜ் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜ் நகரில் டாஸ்மாக் கடை கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கும் போதே கடை அமையக்கூடாது என்று பல்வேறு எதிர்ப்பு பொதுமக்கள் சார்பாக மனுக்கள் அளிக்கப்பட்டது. 

டாஸ்மாக்

இதன் அருகில் காமராஜர் நகர் பெண்கள் கழிப்பிடம் மற்றும் ஊராட்சி பெண்கள் வேலைசெய்யும் நர்சரி உள்ளது. பெண்களுக்கும் மற்றும் விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கும் பெரும் தொல்லைகளை அளித்துவருகிறது. மேலும் தொடர்ந்து இந்த டாஸ்மார் கடை மற்றும் பார் நடத்தும் நபர்களால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது.மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் இந்த பகுதியில் நடைபெறுகிறது.

நேற்று கூட காமராஜர் நகரில் பொதுமக்களுக்கு இடையூராக பிரச்சனை நடைபெற்று அதன் காரணமாக சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பொதுமக்களுக்கு பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள மதுபானக்கடை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் கடந்த ஆண்டு 500 கடைகளை அப்புறபடுத்தியுள்ளார்.

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து தொடர்ந்து பொதுமக்கள் நலன் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதும் பல்வேறு குற்றப்பிண்ணணி உள்ளவர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகும் இந்த டாஸ்மாக் கடை 10144 அகற்றி தருமாறு பெண்கள் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web