தூத்துக்குடி பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா... திரளான பக்தர்கள் தரிசனம்!

 
பாகம்பிரியாள்
 

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. 

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கடந்த 19ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பாகம்பிரியாள்

திருவிழாவில் தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். 9ம் திருநாளான கடந்த 27ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. 

பாகம்பிரியாள்

இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு  கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அருள்மிகு பாகம்பிரியாள் - சங்கர ராமேஸ்வா் மாலை மாற்றும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி - அம்பாளை தரிசித்தனா்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web