தூத்துக்குடி: உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த ஆண்டு பெய்த கனமழை வெள்ளத்தில் குளங்கள், வரத்து கால்வாய்கள், தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகளாலும் பலத்த சேதமடைந்தன. இதனால் வெள்ளநீர் குடியிருப்புகளிலும், வயல்களிலும் பாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும், சாலைகள், பாலங்களும் சேதமடைந்தன.
இந்நிலையில், நடப்பு ஊண்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி உப்பாற்று ஓடையில் சீராக தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உப்பாற்று ஓடையில் மேலதட்டப்பாறை, மறவன்மடம், முத்துசாமிபுரம் ஆகிய பகுதிகளில் உப்பாற்று ஓடையை ஆக்கிரமித்து பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சார் ஆட்சியர் பிரபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் உப்பாற்று ஓடையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த பாதைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதன் மூலம் ஓடையில் சீராக தண்ணீர் செல்வதை உறுதி செய்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!