துாத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா... அக்.19ல் கொடியேற்றம்!

 
கொடியேற்றம்
 

துாத்துக்குடி, சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற அக்டோபர் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, வருகிற 19ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு, மஹா கணபதி ஹோம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 30ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 9ம் திருநாளான 27ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 11ம் திருநாளான 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யான வைபவம் நடக்கிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!