தீபாவளிக்கு காரில் சொந்த ஊர் போறவங்க இத ஃபாலோ பண்ணுங்க... அமைச்சர் திடீர் அறிவிப்பு!
அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்கள், பேருந்துகள் முன்பதிவு முடிந்து விட்டது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று அக்டோபர் 21ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு இது குறித்து அமைச்சர் சிவசங்கர், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்பவருக்கு அமைச்சர் சிவசங்கர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். காரில் செல்பவர்கள் கவனத்திற்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
