ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... இன்று சிதம்பரம் நடராஜர் தேர்த்திருவிழா!

 
சிதம்பரம்

இன்று சிதம்பரம் நடராஜர் தேர்திருவிழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் இங்கு   மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. உலகிலேயே மூலவரே வீதி உலா காண்பது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மட்டும் தான். இந்த விழாவை காண உலகம் முழுவதிலும் இருந்து சிவ பக்தர்கள் கூடுவது வழக்கம்.விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று ஜூலை 11ம் தேதி தேர் திருவிழாவும், 12ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது. இன்று தேர் திருவிழாவை முன்னிட்டு மூலவர்களான நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் 5 தேர்களில் வலம் வர ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. 

நடராஜர்

இந்நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.  குறிப்பிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னிதியில் எழுந்தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதீகம். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில்.

இங்கு ஆனி திருமஞ்சன நாளை முன்னிட்டு, 10 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆனி உத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை கண்ணாரக் கண்டு தரிசித்தால், வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும். வறுமை அகலும். செல்வம் சேரும். பிறவிப் பிணி என்னும் பெருநோய் அகலும் என்கின்றன   திருமுறைகள். இந்நாளில் சிவ தரிசனமும், நடராஜர் அபிஷேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஆனந்தமான பெருவாழ்வு பெற  ஆனி திருமஞ்சன நாளில் ஆனந்த கூத்தனை வழிபாடு செய்யலாம்.  

இந்த 2 விழாக்களின் போதும் மூலவர் நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி சுவாமிகள் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான ஆனித் திருமஞ்சனம்   கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும் திருவிழாவில்  தினசரி காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறும்.

சிதம்பரம் நடராஜர் தேர் தேரோட்டம்

விழாவின் 5வதுநாளில்   தெருவடைச்சான் உற்சவமும், சிகர நிகழ்ச்சியான  தேர்த் திருவிழாவும்  நடை பெறும்.    ஆனித்திருமஞ்சனம்  நாளில்  சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.  சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. பிற்பகல்  ஆனித் திருமஞ்சன தரிசனமும், சித்சபை பிரவேசமும் நடைபெறும்.  இரவு முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் விழா இனிதே நிறைவடையும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web