திருச்செந்தூர் உண்டியல் காணிக்கை... 1 கிலோ தங்கம்.. 20 கிலோ வெள்ளி... ரூ.3.62 கோடி வசூல்!

 
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.3.62 கோடி செலுத்தி இருந்தனர். மேலும். ஒரு கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வசந்த மண்டபத்தில் கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் 2 நாட்கள் நடந்தது.  தாங்கினார்.

திருச்செந்தூர்

இதில் மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 791-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் ஒரு கிலோ 55 கிராமும், வெள்ளி பொருட்கள் 20 கிலோ 336 கிராமும், வெளிநாட்டு பண நோட்டுகள் 675-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

திருச்செந்தூர்

காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web