தீபாவளி கொண்டாட்டம்| நாடு முழுவதும் ஒரே நாளில் ரூ60,000 கோடிக்கு வர்த்தகம்... தங்கம் மட்டுமே ரூ20,000 கோடிக்கு விற்பனை!
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி விற்பனையாக இன்று ஒரே நாளில் மட்டும் வர்த்தக விற்பனை ரூ 60,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது . இதனை வர்த்தகர்களின் அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இன்று அக்டோபர் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியா முழுவதும், 20,000 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ 2,500 கோடி மதிப்புள்ள வெள்ளியும் தீபாவளியை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டதாக சிஏஐடியின் பொதுச் செயலாளரும் சாந்தினி சௌக்கின் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

சிஏஐடியின் அகில இந்திய நகை வியாபாரிகள் மற்றும் தங்க நகைகள் கூட்டமைப்பு (ஏஐஜேஜிஎஃப்) தேசிய தலைவர் பங்கஜ் அரோரா, தங்கம் மற்றும் வெள்ளிக்கு அதிக தேவை இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். விலைவாசி உயர்வு காரணமாக குறைவான எடையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும் பண அடிப்படையில் விற்பனை அதிகரித்ததாக கூறியுள்ளார்.

“இந்த ஆண்டு, சுமார் 25 டன் தங்கம் நாடு முழுவதும் விற்கப்பட்டது, இதன் மதிப்பு சுமார் ரூ 20,000 கோடி, அதே சமயம் தோராயமாக 250 டன் வெள்ளி ரூ 2,500 கோடிக்கு விற்கப்பட்டது. கூடுதலாக, பழைய வெள்ளி நாணயங்களின் தேவை அதிகரித்தது, ஒரு நாணயம் ரூ 1,200 முதல் ரூ 1,300 வரை விலையில் உள்ளது,” எனக் கூறியுள்ளார்.
டெல்லியில், சாந்தினி சௌக் , தரிபா கலன், சதர் பஜார், கமலா நகர், அசோக் விஹார், மாடல் டவுன், பிடம்புரா, பஸ்சிம் விஹார், ரோகினி, ரஜோரி கார்டன், துவாரகா, ஜனக்புரி, தெற்கு விரிவாக்கம், கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட பிரபலமான சில்லறை சந்தைகளில் தந்தேராஸ் தீபாவளி விற்பனை அதிகரித்ததாக தெரிகிறது.
தீபாவளியின் ஐந்து நாள் கொண்டாட்டத்தின் தொடக்க நாளான இன்று தந்த்ரோஸ் அக்டோபர் 29, செவ்வாய்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இந்த நாளில் குபேரர், லட்சுமி தேவி மற்றும் தன்வந்திரி பகவானை வணங்கி செல்வம் மற்றும் ஆரோக்கியம் பெற ஆசீர்வாதம் பெறுகின்றனர். இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பாத்திரங்கள், துடைப்பம் போன்ற பிற பொருட்களை வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
