ஹோட்டல் உணவில் கிடந்த பல்.. பணம் பறிக்க வாடிக்கையாளர்கள் போட்ட பிளாண்.. அதிர்ந்த காவல்துறை!
சேலத்தில் உள்ள ஓட்டல் உணவில் மனிதனின் கடவாய் பல் இருந்ததாக ஆட்டோ டிரைவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகர் 5 ரோடு சந்திப்பு பகுதியில் அசோக் ஓட்டல் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் ராமசுப்பு. இந்நிலையில் நேற்ற்ய் று மாலை அசோக் ஓட்டலில் சாப்பிட வந்த கோரிமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவர் புரோட்டா வாங்கினார்.
அப்போது புரோட்டாவுக்கு கொடுத்த சிக்கன் கிரேவியில் கடவாய் பல் இருந்ததாக கூறி கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவில் இருந்ததாக கூறப்பட்ட பல்லை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடையில் உணவு விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
நாகராஜிக்கு கொடுத்த புரோட்டாவுக்கு குழம்பு தராத நிலையில், அவரது நண்பர்கள் குழம்பில் பல் இருப்பதாக கூறி கடை உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரத்தை மிரட்டியதாகவும், அதற்கு ஓட்டல் நிர்வாகம் தர மறுத்ததாகவும், உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் அழைத்ததாக உரிமையாளர் கூறினார். இதேபோல், பல கடைகளில் புழுக்கள் இருப்பதாக போலியாக கூறி, ஓட்டல் உரிமையாளர்களிடம் பணம் பறிப்பதாக இந்த கும்பல் புகார் அளித்துள்ளதால், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க