பெங்களூருவில் பரிதாபம்... கால்வாயில் விழுந்து இழுத்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவன் மரணம்!
சாந்திநகரில் உள்ள எஸ்.பி., அலுவலகம் முன்பும், மழைநீர் வெள்ளம் போல ஓடியது. இந்நிலையில், நேற்று சாந்திநகர் பகுதியில் வசித்து வரும் பசவராஜ் என்பவரின் மகன் நிவேதன் குடகேரி( 12) என்பவர், அப்பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது மழை வெள்ளத்தில் திறந்து கிடந்த சாக்கடை கால்வாயில் தவறுதலாக விழுந்து, அடித்து செல்லப்பட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு, உடனடியாக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, தீயணைப்பு துறையினருக்கும் தகவலளித்தனர். தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் இறங்கி நிவேதனை தேடி வந்த நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் நிவேதன் சடலமாக மீட்கப்பட்டார்.

நிவேதன் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். நகராட்சி ஊழியர்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்வதற்காக மூடியை தனியாக எடுத்து வைத்திருந்த நிலையில், மழை பெய்ததால் மூடியை மூடாமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மக்கள் மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
