ரயில் உணவு அலட்சியங்கள்.. உயிரோடு மிதந்த பூரான்.. அதிர்ச்சியடைந்த பயணி!
சமீப காலமாக, உணவகங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் பூச்சிகள் மற்றும் புழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி, வேஃபர் பாக்கெட்டில் தவளை, சாம்பாரில் இறந்துப்போன எலி, ஏர் இந்தியா உணவில் பிளேடு, ஐஸ்கிரீமில் மனித விரல், சாக்லேட்டில் புழு ஆகியவை காணப்பட்டன.
Yes, for sure, Indian Railway food quality has improved, now they are serving raita with more protein. https://t.co/YKtUQt7roZ pic.twitter.com/FpJVIKOhBC
— Aaraynsh (@aaraynsh) October 21, 2024
அந்த வகையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டெல்லியை சேர்ந்த அரன்ஷ் சிங் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்தார். இதற்கிடையில், ரயிலில் கொடுத்த உணவில் பூரான் ஒன்று உயிருடன் மிதந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அரன்ஷ் சிங், உணவில் பூரான் கலந்திருப்பது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரித்தார்.

பின்னர், இது தொடர்பாக அவர் தனது X இணையதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். இதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இந்திய ரயில்வேயின் உணவின் தரம் மேம்பட்டுள்ளது. இப்போது ரயில்வே துறை அதிக புரதச்சத்து கொண்ட ரைதாவை வழங்குகிறது” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். ரயில்வே துறையின் அலட்சியத்திற்கு இணையவாசிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
