8,50,000 சிற்றுண்டி கிட்... பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில்.. தவெக தொண்டர்களுக்கு வழங்கத் தயார் நிலையில்!

 
தவெக கிட்


 நாளை அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு  நடைபெற உள்ளது. 85 ஏக்கர் நிலப்பரப்பில்  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடக்கும் இந்த பிரமாண்டமான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று இரவே விஜய் மாநாட்டுத் திடலுக்கு வர திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நாளை மாநாடு நடைபெறவிருக்கும் சூழலில் தொண்டர்கள் பலரும் இன்றே விக்கிரவாண்டியை நோக்கிப் புறப்படத் தொடங்கிவிட்டனர். பலர் கவன ஈர்ப்பிற்காக சைக்கிளிலேயே விக்கிரவாண்டிக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ள்னர்.  

தவெக பந்தக்கால் மாநாடு விஜய்

சென்னை தாம்பரத்திலிருந்து மாநாடு நடைபெறும் பகுதி வரைக்கும் வழிநெடுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.   சாலை வழியாகவே விஜய் பயணிக்கவிருப்பதாக வெளிவரும் தகவலின் அடிப்படையில் விஜய்யை வரவேற்பதற்காக இந்த பேனர்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.  120 கி.மீ முழுவதும் ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளியில் தொடர்ந்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.  

தவெக


தலைமைச் செயலக செட், தலைவர்களின் பேனர் என ஒருபுறம் பரபரப்பாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்  மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்களுக்குக் கொடுப்பதற்காகச் சிற்றுண்டி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில் அடங்கிய சிற்றுண்டி கிட்டை தொண்டர்களுக்கு வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.  மொத்தமாக 8.5 லட்சம் சிற்றுண்டி கிட்கள் தொண்டர்களுக்காகத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!