#TVKMaanaadu உறுதிமொழி ஏற்பு | "அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு"

தலைவா, தலைவா என தொண்டர்கள் உற்சாகத்துடன் கூவி தமிழன் கொடி பறக்குது என கட்சிக்கொடிப் பாடலும் ஒலிபரப்பப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தவெக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தவெக மாநாடு#தமிழகவெற்றிக்கழகம் #TvkVijayMaanadu #TVKMaanaadu #TVK #TVKVijay #Vikravandi #TVKConference #TVKMaanaaduOct27 #ETVBharatTamil pic.twitter.com/JZNWlH2IUM
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 27, 2024
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக மாநாடு தொடங்கியது. இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை கட்சியின் பொருளாளர் வெங்கட் ராமன் வாசித்தார். அதில், “தமிழக வெற்றிக்கழகம், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும். விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னை தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள் தனிமனிதராக செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை , சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். சாதி மதம் பாலினம் ,பிறந்த இடம் ஆகிவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்” என ஏற்கப்பட்டது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!