சாலையில் அரட்டை அடித்த இருவரை கண்டித்ததால் ஆத்திரம்.. கூலித் தொழிலாளியை கொடூரமாக அடித்துக் கொலை!

 
கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று இரவு கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டு தொட்டியாங்குளத்தை சேர்ந்தவர் முனியாண்டி (45).   இவர் திருமணமாகாதவர் மற்றும் அவ்வப்போது தினக்கூலி வேலை செய்து வந்தார். அருப்புக்கோட்டையிலிருந்து மேட்டுத் தொட்டியாங்குளம் செல்லும் வழியில் விவிஆர் காலனி உள்ளது. அந்த வழியாக முனியாண்டி அடிக்கடி வந்து செல்வார்.

இந்நிலையில், அருப்புக்கோட்டையில் இருந்து மேட்டுத்தொட்டியங்குளத்துக்கு சென்று கொண்டிருந்த போது வாடகை கார் டிரைவர் அருண் (23), விவிஆர் காலனி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துப்பாண்டி (39) ஆகியோர் செல்போன் பார்த்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த முனியாண்டி இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் முனியாண்டிக்கும், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருப்புக்கோட்டையில் இருந்து முனியாண்டி தனது பைக்கில் மேட்டுத்தொட்டியாங்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​பழைய மரக்கடை அருகே அருண், முத்துப்பாண்டி ஆகியோர் குறுக்கே வந்த அவரை கட்டையால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண், முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!