ஏரிக்கரை முட்புதரில் பாய்ந்த இருசக்கர வாகனம்.. மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போளூர் சாலையில் அருகிலுள்ள புதிய குயிலம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பு (35). இவர் தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செங்கம் நோக்கி அதிகாலை சுமார் 6 மணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஏரிக்கரை முற்புதரில் பாய்ந்ததில் அன்பு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க மனைவி கண் முன்னே உயிரிழந்தார்.

மேலும் அன்பு மனைவி சாலையில் சென்றவர்கள் உதவிக்கு அழைத்தும், கைபேசியில் தங்கள் கிராமத்தில் உள்ள உறவினர்களை கதறியபடி அழைத்துள்ளார். அங்கு வந்த செங்கம் காவல்துறையினர் இருசக்கர வாகனத்துடன் சிக்கியவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினர் உடன் வந்த மனைவி மற்றும் அவர்களின் கிராம உறவினர்களிடம் விசாரித்த போது இவர் தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், தன்னிடம் தீபாவளி சீட்டு கட்டிய உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதற்கு சென்றதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
