அச்சச்சோ... கதறும் மக்கள்... பதற வைக்கும் வீடியோ... பெங்களூரில் சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டிடம்... 17 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது... மீட்பு பணிகள் தீவிரம்!

 
பெங்களூரு

 பெங்களூருவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த  இடிபாடுகளில் 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.கர்நாடக மாநிலம், பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து 2 மீட்பு வேன்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.நகரத்தில் கனமழை பெய்து வரும் நேரத்தில் இச்சம்பவம் நடந்ததாக  தெரிவித்துள்ளனர்.

 கட்டிடம்

முதற்கட்ட விசாரணையில்  கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மக்கள் அடியில் சிக்கியதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!