ஒகேனக்கல்லில் நீர் வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா் வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியில் இருந்து தற்போது 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணிக்கு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் 19,000 அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இதனிடையே ஒகேனக்கல்லுக்கு வார விடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த கடந்த சில நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒகேனக்கல் அருவில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா கிளம்பிச் செல்பவர்கள் இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அதற்கேற்ப உங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கோங்க.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!