நியாயம் கேட்க சென்ற இடத்தில் விபரீதம்.. த.வெ.க நிர்வாகியை ஊசியால் குத்திய நபர் கைது!

 
த.வெ.க நிர்வாகி ராஜா

நாகையில்  சிறுவர்களி்டையே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில்   தட்டி கேட்க வந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியை கோணி தைக்கும் ஊசியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகைப் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜா, தமிழக வெற்றிக் கழக மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் ராஜாவின் அண்ணன் மகன் லோகேஷ், செல்லூர் சுனாமி குடியிருப்பில் உறவினர் ஜெயக்குமார் ஆகியோருக்கு இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

நள்ளிரவில் நாகை அரசு மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களை பார்க்க இரு தரப்பினரும் வந்தனர். அப்போது, ​​பட்டாசு வெடித்த சிறுவர்களி்டையே அடிப்பது நியாயமா? என த.வெ.க நிர்வாகி ராஜா சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், கையில் மறைத்து வைத்திருந்த கோணி தைக்கு ஊசியால் ராஜாவின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

கைது

இதனால் ராஜா மயக்கமடைந்ததால், மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயக்குமாரை கைது செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!