கணவனை தலையணையை அழுத்தி கொலை செய்த மனைவி... கள்ளக்காதலால் விபரீதம்!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ண சல்யாண். இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் . இவர்கள் இருவரும் 18 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பாலகிருஷ்ணாவின் வருமானம் போதுமான அளவு இல்லாததால் பிரதிமா அதே ஊரில் சொந்தமாக ஒரு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பதிவிட்டு சமூக வலைதளத்தின் மோகத்தில் சிக்கியிருந்தார். சமீபத்தில் பிரதிமாவுக்கு 28 வயதான திலிப் ஹெக்டேவுடன் காதல் ஏற்பட்டது. இந்த காதலை முறித்துக் கொள்ளும்படி பலமுறை பிரதிமாவின் குடும்பத்தார் அறிவுறுத்தினர். ஒன்றரை மாதத்திற்கு முன்பு காவல் நிலையத்திற்கு புகாராக சென்ற நிலையில், அங்கு தான் திலிப் உடன் வாழ விரும்புவதாக அவர் கூறினார். இந்நிலையில் அனைவரும் அவரை சமாதானம் செய்து கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இது நடந்து சில நாட்களில் பாலகிருஷ்ணாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு அடுக்கடுக்காக பல உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் உடுப்பி, மங்களூரு, பெங்களூரு என பல நகரங்களில் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தான் உயிர் பிழைப்பது கடினம் என்று தெரிந்து கொண்ட பாலகிருஷ்ணா, அக்டோபர் 19ம் தேதி பெங்களூரு நகரில் இருந்த விக்டோரியா மருத்துவமனையில் இருந்து கிளம்பி இரவு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அடுத்த நாள் 20ம் தேதி காலை பாலகிருஷ்ணா மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது முகத்தில் பல இடங்களில் கீறல்களும் காயங்களும் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விசாரணையில் பிரதிமாவின் அண்ணன் சந்தீப் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரை தனியாக அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்.
பிரதிமாவின் குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் விசாரித்தபோது அவர் 20ம் தேதி காலை சுமார் 1:30 மணிக்கு அவரது காதலனை வரவைத்து தலையணையை கொண்டு அவரை அழுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். தவறை மன்னித்து விட்டுவிடும் படி அவர் கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காமல் அவரது சகோதரர் சந்தீப் உடனடியாக இந்த கொலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலகிருஷ்ணாவை தலையணையை வைத்து கொலை செய்தது மட்டுமின்றி பிரதிமாவிடம் ஸ்லோ பாய்சன் வாங்கிக் கொடுத்தது தான்தான் என விசாரணையில் திலீப் வாக்குமூலம் அளித்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!