பெண்களின் உள்ளாடைகள் தான் டார்கெட்.. இரவு நேரத்தில் உலா வரும் சைக்கோவால் பதறும் மக்கள்!

 
 உள்ளாடைகள் திருட்டு

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் கூரை வழியாக வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கடந்த 3 மாதங்களாக இந்த திருட்டு சம்பவத்தால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர். முதலில் இது குறித்து அமைதி காத்த அவர்கள், அருகில் உள்ள பல வீடுகளில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடந்த நிலையில், பெண்கள் மத்தியில் பேசப்பட்டதால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் திருடன் கூரை வழியாக வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. ஆனால் பதிவான காட்சிகளில் திருடனின் முகத்தை அடையாளம் காண முடியவில்லை. இந்த திருடனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், திருடனை விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

போலீஸ்

இது குறித்து அவர் கூறுகையில், மர்ம நபர் இரவு நேரங்களில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த திருடனின் நோக்கம் என்ன? என்பது தெரியாது, ஆனால் ஒரு பயம் இருக்கிறது. பெண்களாகிய நாங்கள் தனியாக மொட்டை மாடிக்குச் செல்லவும், சொந்த வீட்டின் கதவைப் பூட்டியே இருக்கிறோம். இந்த திருடன் எங்களை தாக்கிவிடுவானோ என்ற அச்சம் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்  .

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web