எகிறும் எதிர்பார்ப்பு... நாடு முழுவதும் பரபரப்பு... இன்று மாலை தவெக முதல் மாநாடு... விஜய் வெளியிடப் போகும் முக்கிய அறிவிப்புகள்!

விக்கிரவாண்டியில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மாநாட்டு திடலில் விஜய் பேச்சைக் கேட்பதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் வந்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பிற கட்சி அரசியல் தலைவர்களே எதிர்பார்க்காதது, கேரளா, கர்நாடக மாநிலங்கள் இருந்தும் அதிகளவில் ரசிகைகள், பெண்கள் மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்து குவிகிறார்கள்.
இன்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்து குவிகின்றனர். மாநாட்டு பந்தலில் இருப்பவர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் விஜய் ரசிகர்களை வரவேற்கிறார்கள். மாநாட்டு பந்தலிலும் அனைவருக்கும் தாராளமாக குடி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இன்று மாலை 3 மணி அளவில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 4 மணியளவில் மாநாட்டு திடல் நடிகர் விஜய் தனிப்பாதை வழியாக மாநாட்டு மேடைக்கு செல்கிறார். அப்போது மேடையில் கட்சி பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேடைக்கு வந்ததும் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடி தயாராக இருக்கிறது. இதையடுத்து மாநாடு தொடங்குகிறது. வரவேற்புரை முடிந்ததும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பற்றிய விளக்க உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்புரையாற்ற உள்ளார். அவரது உரை மாநாட்டு எழுச்சி உரையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் மாலை 6 மணி முதல் 8 மணி வரை சுமார் இரண்டு மணி நேரம் பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் கொள்கைகள், கட்சி கொடியின் நிறம், வாகை மலர், யானை உருவங்கள் பற்றிய விளக்கம், எதிர்கால செயல்திட்டம், 2026 தேர்தல் பற்றி இன்றைய மாநாட்டில் நடிகர் விஜய் அறிவிக்கப் போகிறார். எனவே நடிகர் விஜய் இன்று அறிவிக்கப் போவதுதான் அவரது கட்சியை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் என்பதால் நாடு முழுவதுமே பொதுமக்களையும், பல்வேறு அரசியல் கட்சியினரையும் இந்த மாநாடு உற்று நோக்க வைத்துள்ளது. முக்கிய அறிவிப்புகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், எதிர்கால லட்சியங்கள், திட்டங்களையும் விஜய் தொண்டர்களிடம் விளக்கமாக எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் பேச்சை தொண்டர்கள் முழுமையாக கேட்க வேண்டும் என்பதற்காக மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டின் கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கும் அவரது பேச்சு கேட்க வேண்டும் என்பதற்காக 175 அடி அகலத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களும் தன்னை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக மேடையின் முன்பு இருந்து மக்கள் கூட்டத்தின் நடுவில் 800 மீட்டர் தூரத்துக்கு பிரத்யேக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடை விஜய் ஸ்டைல். மக்களுடன், மக்களிடையே நடந்து சென்று அவர்கள் அருகே சென்று பேசுவதை நடிகர் விஜய், பொதுமேடையில் தன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கடைபிடித்து வந்திருக்கிறார். மக்களுக்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் அந்த கடைசி வரை நடந்து சென்று அவர்களிடையே பேசுவார். அப்போது அவர் மீது லேசர் ஒளிக்கற்றைகள் விழவும் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் நடிகர் விஜய் மாபெரும் சக்தியாக, பெருத்த ஆதரவுடன் வெளிவருகிறார் என்பதையே இந்த மாநாடு காட்டுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!