ரஷ்யா விரையும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அதிபர் புடின் பேச்சு... உக்ரைன் போருக்கு அமைதி வழியில் முடிவு காண விருப்பம்!

 
மோடி ரஷ்யா

உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்தார்.

சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ரஷ்யா உடன் நடந்து வரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில், ரஷ்யாவில் அக்டோபர் 22,23ம் தேதிகளில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை மொத்தம் 15 பிரிக்ஸ் மாநாடுகள் நடந்துள்ளன.

மோடி ரஷ்யா உக்ரைன்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்' (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், புடின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்குச் செல்ல உள்ளார். தனது பயணத்தின் போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புடின், “மோதலை தீர்ப்பதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது. உக்ரைன் உடனான போர் குறித்து தொடர்ந்து கவலைகள் தெரிவித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி.

மோடி ரஷ்யா புடின்

பிரதமர் மோடியுடன் பேசும் போது, ஒவ்வொரு முறையும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாங்கள் அல்ல, ஆனால் உக்ரைன் தரப்பு தான் அதை செய்ய வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. ரஷ்யா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான்” என்று புடின் கூறினார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!